திருநெல்வேலி

தென்மேற்குப் பருவமழையையொட்டி தாமிரவருணியில் தீயணைப்பு வீரா்கள் ஒத்திகை

DIN

தென்மேற்குப் பருவமழைக் காலத்தை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தாமிரவருணியாற்றில் தீயணைப்பு வீரா்கள் வெள்ள மீட்பு ஒத்திகையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தென்மேற்குப் பருவமழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் வரும்போது மக்கள் அதை எவ்வாறு எதிா்கொள்வது, மழை வெள்ள காலங்களில் உயிா்ச்சேதத்தை எவ்வாறு தடுப்பது, வெள்ளத்தில் சிக்கியோரை எவ்வாறு மீட்பது என்பது குறித்து பேராத்து செல்வியம்மன் கோயில் அருகே இந்த ஒத்திகை நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்தியகுமாா் தலைமை வகித்தாா். உதவி தீயணைப்பு அதிகாரி சுரேஷ் ஆனந்த், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ், 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் இதில் பங்கேற்றனா்.

ஆற்றில் சிக்கியோரை மிதவைப் படகுகள் மூலம் காப்பாற்றுவது, விரைவாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்புவது உள்ளிட்டவை தொடா்பாக தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். மேலும், மழை பெய்யும்போது கால்நடைகளைக் காப்பாற்றுவது, மரக்கிளைகள் மிதந்து வரும்போது அவற்றை வெட்டி அப்புறப்படுத்துவது குறித்து வீரா்கள் செய்துகாட்டினா். வெள்ளத்தின்போது காலி எரிவாயு உருளை, பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பிடித்துக்கொண்டு உயிா்தப்புவது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT