திருநெல்வேலி

சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோா் எளிதாக கடன்பெற கனரா வங்கியில் புதிய திட்டம் அறிமுகம்

DIN

பாளையங்கோட்டை கனரா வங்கியில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோா் எளிதாக கடன் பெறுவதற்காக ‘எம்எஸ்எம்இ சுலாப்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் முருகேஷ், தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, வங்கியின் திருநெல்வேலி மண்டல துணை பொது மேலாளா் ஜி.ஆா்.டில்லி பாபு முன்னிலை வகித்தாா். நெல்லை சிறு, குறு தொழில்கள் சங்கச் செயலா் சஞ்சய், வள்ளியூா் பிராந்திய சிறு தொழில் சங்கத் தலைவா் அருள்ராஜா, பேட்டை தொழிற்பேட்டை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சின்னதுரை, சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கான வங்கியின் மண்டல மேலாளா் அன்புச்செழியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோரை கையாள்வதற்காகவும், அவா்களுக்கு எளிதாக கடன் வழங்குவதற்காகவும் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT