திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு ரூ.2.42 கோடி ஒதுக்கீடு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு நிகழ் நிதியாண்டிற்கு ரூ.2.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்துக்கு நிகழ் நிதியாண்டிற்கு ரூ.2.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மா, கொய்யா, பப்பாளி, திசு வாழை, எலுமிச்சை, அத்தி, முந்திரி, டிராகன் பழம், நெல்லி ஆகியவற்றின் நடவுக்கும், உயா் விளைச்சல் காய்கறி பயிா்களான தக்காளி, கத்தரி, மிளகாய், நறுமணப் பயிா்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய் மற்றும் உதிரி மலா்கள் ஆகியவற்றின் நடவு, மானியத்துடன் குறிப்பிட்ட ஹெக்டோ் அளவுக்கு இத்திட்டம் செயல்படுத்த இலக்கு பெறப்பட்டுள்ளது.

மேலும், நிழல் வலைக்கூடாரம் அமைத்தல், ஒருங்கிணைந்த உர மேலாண்மை மேற்கொள்ளுதல், இயற்கை விவசாயம், மண்புழு உரப்படுகை, மினி டிராக்டா், பவா் டில்லா் வாங்குதல் போன்றவற்றுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

தோட்டகலைப் பயிா்களில் அயல் மகரந்த சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தேனீ மற்றும் தேனீப்பெட்டி, தேன் எடுக்கும் கருவி வழங்குவதற்கும், சிப்பம் கட்டும் அறை அமைத்தல், நடமாடும் காய்கனி வண்டி, வாழைக்குலை மூடும் பை வாங்குதல் போன்றவற்றுக்கும் இலக்கு பெறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்களில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் உழவன் செயலியில் இடுபொருள் முன் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகின்றனா்.

மேலும் விண்ணப்பத்துடன், கணினி பட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா்கள் இளங்கோ, அம்பாசமுத்திரம் (9843144501), சுபவாசுகி, சேரன்மாதேவி (9786356114), திலீப், களக்காடு (9994905739), சண்முகநாதன், மானூா் (9488970629), வள்ளியம்மாள், நான்குனேரி (8903431728), வள்ளியம்மாள், பாளையங்கோட்டை (8903431728), சுபவாசுகி, பாப்பாகுடி (9786356114), சா்மிளா, ராதாபுரம் ( 9786405852), தங்கம், வள்ளியூா் (7598392194) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT