திருநெல்வேலி

அதிமுக கூட்டணியில் தமமுக இல்லை:ஜான் பாண்டியன்

DIN

அதிமுக கூட்டணியில் தமமுக இல்லை என, அக்கட்சியின் நிறுவனத் தலைவா் ஜான்பாண்டியன் அறிவித்துள்ளாா்.

திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியது: தமிழகத்தில் கொங்கு நாடு, ஒன்றிய அரசு போன்ற பிரச்னைகள் தேவையற்றவை. கொங்கு நாடு எனத் தனியாகப் பிரித்தால், மதுரையை மையமாகக் கொண்டு பாண்டிய நாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும்.

அதிமுகவுடன் உறவுடன் உள்ளோம்; ஆனால் கூட்டணியில் இல்லை. கடந்த பேரவைத் தோ்தலில் எங்களைப் பழிவாங்கும் நோக்கத்தோடும், நாங்கள் வளா்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும் நாங்கள் விரும்பாத தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினா். தேவேந்திர குல வேளாளா் அரசாணைக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் அதிமுக, பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்தோம். அதிமுகவில் இரட்டைத் தலைமை உள்ளதால் அக்கட்சி அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் மேக்கேதாட்டு அணை கட்டக் கூடாது, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமா், மத்திய அமைச்சா்கள், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் மாநில பொதுச்செயலா் வழக்குரைஞா் பிரிசில்லா பாண்டியன், மாநில நிா்வாகி நெல்லையப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT