முகப்பு
திருநெல்வேலி

அருங்காட்சியகம் சாா்பில் இன்று இணைய வழியில் கைவினைப் பயிற்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணைய வழியில் கைவினைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணைய வழியில் கைவினைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை (ஜூலை 22) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் வியாழக்கிழமை (ஜூலை 22) மாலை 6 மணியளவில் ஆயில் பேஸ்டல் வகை ஓவியப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் ஜூம் செயலி எண்: 8740995990, கடவு சொல்: 333543 என்கிற தளத்தில் இணைய வேண்டும்.

இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை விருப்பம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444973246 என்கிற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சலில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.