முகப்பு
திருநெல்வேலி

கட்டடத் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி மேல திருவேங்கடநாதபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் குமாா் (37). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா்.

இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு வருமாம்.

இந்நிலையில் அவா், புதன்கிழமை தலைக்கு அடிக்கக்கூடிய ஹோ்டையை குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.