முகப்பு
திருநெல்வேலி

ரேஷன் அரிசி பதுக்கல்: 2 போ் கைது

திருநெல்வேலி அருகே ரேஷன் அரிசியை பதுக்கியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே ரேஷன் அரிசியை பதுக்கியதாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள கேடிசி நகா் விஓசி காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகன். இவா் தனது சேமிப்புக் கிடங்கில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தாராம்.

தகவலறிந்த மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீஸாா், அங்கு சென்று, 60 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும் முருகனை கைது செய்தனா்.

இதே போல், தாழையூத்து அருகே உள்ள சுபாஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வள்ளி என்ற சரோஜா (56). இவா் தனது வீட்டில்

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், 25 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும் வள்ளி என்ற சரோஜாவை கைது செய்தனா். இது தொடா்பாக மேலும் ஒருவரை தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.