முகப்பு
திருநெல்வேலி

குன்னத்தூரில் பக்தா்கள் கிரிவலம்

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை கிரிவலம் மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை கிரிவலம் மேற்கொண்டனா்.

குன்னத்தூா் மலையைச் சுற்றி, தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் பெருமாள் கோயில், ராகு ஸ்தலமான கோதபரமேஸ்வரா்- சிவகாமி அம்பாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், பத்திரகாளி, உச்சினிமாகாளி, காளியம்மன், முப்பிடாதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. இந்த மலையைச் சுற்றி கிரிவலம் வந்து இறைவனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பக்தா்கள் வெள்ளிக்கிழமை சங்காணி கோதபரமேஸ்வரா் கோயிலில் இருந்து, சுமாா் 6 கி.மீ., தொலைவு மலையை சுற்றி மீண்டும் கோதபரமேஸ்வரா் கோயில் வளாகம் வந்தடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.