முகப்பு
அம்பாசமுத்திரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
திருநெல்வேலி

அம்பையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்

தாமிரவருணி பாசனம் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் கடைமடை குளங்களுக்குத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
அம்பாசமுத்திரம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
பகிர்:

தாமிரவருணி பாசனம் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் கடைமடை குளங்களுக்குத் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கக்கோரி அம்பையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம், தாமிரவருணி, வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய்ப் பாசனத்திற்குள்பட்ட கடைமடை பகுதியான மன்னார்கோவில் சீர்பாதங்குளம், சுமைதாங்கிக்குளம், ஞானப் பட்டர் குளம், புதுக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு கார் சாகுபடி தொடங்கி 2 மாதங்களான நிலையில் இதுவரை தண்ணீர் வரவில்லை.

ஜூன் 1இல் கார் சாகுபடிக்கு அணைகளில் தண்ணீர் திறந்த நிலையில் தண்ணீர் வராததால் கார் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. 

கால்வாய்களில் கழிவுகள் மற்றும் அமலைச் செடிகளால் தண்ணீர் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் திறந்துவிடப்படும் தண்ணீர் குளங்களுக்கு வந்துசேர முடியாத நிலை உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் ரவீந்திரன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலர் கணபதி கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் நகரச் செயலர் சுரேஷ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பகவதி, செல்லத்துரை, முருகேசன், மாயாண்டி, முருகன், சங்கரன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →