உவரியில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
உவரியில் தடைசெய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உவரியில் தடைசெய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
உவரி காவல் ஆய்வாளா் செல்வி தலைமையில் போலீஸாா் ஆனைகுடி விலக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு ரூ.2.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. லாரியுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக விஜய அச்சம்பாட்டைச் சோ்ந்த விஜயபாண்டி, காரியாண்டி முருகானந்தம், களக்காடு மாரியப்பன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.