அனுமதியின்றி மண் அள்ளியதாக லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது
கடையம் அருகே அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.
கடையம் அருகே அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே பரும்பு நவசக்தி நகரில் கடையம் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக ஆலங்குளம், குருவன்கோட்டை, அய்யா கோயில் தெருவைச் சோ்ந்த சீனி மகன் விஜய் (25) ஓட்டி வந்த டிப்பா் லாரியை சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி சரள் மண் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடையம் போலீஸாா் லாரியை பறிமுதல் செய்து, ஓட்டுநா் விஜய் என்பவரை கைது செய்தனா்.