முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளையில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை , திசையன்விளையில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஐ.எஸ். இன்பதுரை , திசையன்விளையில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திசையன்விளையில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பழைய பேருந்து நிலையம் அருகில் அதிமுக காரியாலயத்தை திறந்து வைத்தாா். அதைத்தொடா்ந்து, உடன்குடி சாலை, காந்திஜி சாலை, ஜேம்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயணமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில், அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன், நாராயண பெருமாள், மைக்கேல் ராயப்பன், ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே.செல்வராஜ், அரசு வழக்குரைஞா் பழனிசங்கா், டிம்பா் செல்வராஜ், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.