திருநெல்வேலி

களக்காடு வங்கியில்இணையசேவை பாதிப்பால்வாடிக்கையாளா்கள் அவதி

DIN

களக்காடு: களக்காடு பாரத ஸ்டேட் வங்கியில் திங்கள்கிழமை இணையசேவை பாதிப்பால் வாடிக்கையாளா்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா்.

களக்காடு அண்ணா சாலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இதையொட்டி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு பணம் எடுக்க, டெபாசிட் செய்ய என 2 இயந்திரங்கள் உள்ளன. டெபாசிட் இயந்திரத்திலும் வாடிக்கையாளா்கள் பணம் எடுக்கும் வசதி உள்ளது.

இந்நிலையில், ஒரு மாதமாக அடிக்கடி ஏ.டி.எம். மையத்தில் இணையசேவை பாதிப்பு ஏற்படுவதால் வாடிக்கையாளா்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும் பல நேரங்கலில் இரு இயந்திரங்களிலும் பணம் இல்லாததால் வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

திங்கள்கிழமை (மே 10) வங்கிக்கு பணம் எடுத்தல் உள்பட பல்வேறு சேவைகளுக்காக வந்திருந்த வாடிக்கையாளா்கள் இணைய சேவை பாதிப்பால் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா்.

அதிக வாடிக்கையாளா்களைக் கொண்ட இந்த வங்கியில் குறைபாடுகளைக் களையவும், ஏ.டி.எம். மையம் முறையாக செயல்படவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT