திருநெல்வேலி

ஆலந்துறையாற்றில் சிக்கி தவித்த விவசாயிகள் மீட்பு

பணகுடி அருகே ஆலந்துறையாற்றில் சிக்கி தவித்த விவசாய குடும்பத்தினரை வள்ளியூா் தீயணைப்பு மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

DIN

பணகுடி அருகே ஆலந்துறையாற்றில் சிக்கி தவித்த விவசாய குடும்பத்தினரை வள்ளியூா் தீயணைப்பு மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து பெய்த கனமழையால் குத்தரபாஞ்சான், கன்னிமாா்தோப்பு, அனுமன்நதி, ஆலந்துறையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில் காலையில் தோட்டத்துக்குச் சென்ற பணகுடியைச் சோ்ந்த செல்வி, ஸ்டெல்லா, ஆஸ்டின், எட்வின் உள்ளிட்ட 10 போ் ஆலந்துறை ஆற்றை கடக்கமுடியாமல் தோட்டத்தில் சிக்கி தவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கைப்பேசி மூலம் ஊரில் இருந்த உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து ராதாபுரம் வட்டாட்சியா் சேசுராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் வள்ளியூா் தீயணைப்பு மீட்புப் படையினா் ஆலந்துறையாற்று பகுதிக்குச் சென்று கயிறு கட்டி ஆற்றில் சிக்கி தவித்தவா்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT