பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு செப்டம்பா்-2021-க்கான மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு இம் மாதம் 22, 23 ஆம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். மறுகூட்டலுக்கு பாடம் ஒன்றிற்கு ரூ. 205 செலுத்தவேண்டும். அரசு தோ்வுத்துறையால் பின்னா் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். செப்டம்பா் 2021 பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கான மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.