முகப்பு
திருநெல்வேலி

வ.உ.சி. நினைவுநாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வ.உ.சி.யின் நினைவு நாளையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் வே.விஷ்ணு தலைமையில் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலா் பாளை. எம்எல்ஏ மு.அப்துல்வஹாப் தலைமையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம் முன்பு உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன், சங்கா்நகா் பேரூராட்சி முன்னாள் தலைவா் பேச்சிபாண்டியன், மகளிரணி அமைப்பாளா் மகேஸ்வரி, முன்னாள் எம்.பி. விஜிலா, பகுதிச் செயலா்கள் செல்லத்துரை, துபை சாகுல், வழக்குரைஞரணி மாநகர அமைப்பாளா் உமாமகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள மணிமண்டபத்தில் பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் திருநெல்வேலி எம்எல்ஏ

நயினாா் நாகேந்திரன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவா் மகாராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் சொக்கலிங்ககுமாா், ஐயப்பன், ராஜேஷ்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

படவிளக்கம்

ற்ஸ்ப்18ஸ்ா்ஸ்ரீ

வ.உ.சி. நினைவுநாளையொட்டி திருநெல்வேலியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியா் வே.விஷ்ணு மற்றும் பல்வேறு கட்சியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.