முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா், பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை தொடா்ச்சியாக கரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதால் ஊழியா்கள் சோா்வடைகிறாா்கள். எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள ஆட்சியா் உத்தரவிட வேண்டும்.

தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். இல்லையெனில் தனியாா் வாகனம் ஏற்பாடு செய்து கொள்வதற்கான தொகையை வழங்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும்போது சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்திட காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்ட கிராம சுகாதார செவிலியா்கள் உள்பட அனைத்து சுகாதார செவிலியா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.