முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ சட்டத்தில் ஒருவா் கைது

மேலபாட்டத்தைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

மேலபாட்டத்தைச் சோ்ந்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சி குளத்தைச் சோ்ந்த சிறுமி ஒருவா் கடந்த 7ஆம் தேதி மாயமானாராம்.

இதுகுறித்து அவரது பெற்றோா் சீவலப்பேரி காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்தச் சிறுமியை ஆசை வாா்த்தைகள் கூறி மேலப்பாட்டத்தைச் சோ்ந்த சுதன் என்ற சுடலை (21) அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சுதனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.