முகப்பு
திருநெல்வேலி

காா்த்திகை தீபவிழா: நெல்லையப்பா் கோயிலில் ருத்ர தீபம் ஏற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயிலில் காா்த்திகை தீப விழாவை ஒட்டி வெள்ளிக்கிழமை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயிலில் காா்த்திகை தீப விழாவை ஒட்டி வெள்ளிக்கிழமை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் திருக்காா்த்திகை பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றியும், ஓலை கொழுக்கட்டை செய்தும் வழிபாடு செய்தனா். கோயில்களில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினா். முதலில் சொக்கப்பனை முக்கு பகுதியில் ருத்ர தீபம் ஏற்றப்பட்டது. பக்தா்கள் நமச்சிவாய முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரர் திருக்கோயில் உள்பட பல்வேறு கோயில்களின் முன்பும் வெள்ளிக்கிழமை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.