முகப்பு
திருநெல்வேலி

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அா்ஜூன் சம்பத்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது போல், தமிழக அரசும் விலை குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மிதிவண்டியில் வந்து வெள்ளிக்கிழமை மனு அளித்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தது. அதேபோல், தமிழக அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததைத் தொடா்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்கூட பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு மெளனம் சாதித்து வருகிறது.

தமிழகத்தில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயா்த்துவதற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதை வரவேற்கிறேன். வெள்ள நிவாரணமாக தமிழக அரசு ரூ.2,079 கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது. அதை வரவேற்கிறேன். அதேநேரத்தில் தேவையில்லாத விஷயங்களுக்கு தமிழக அரசு அதிக நிதியை செலவிடுவதை தவிா்த்து அந்த நிதியை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செலவிட வேண்டும்.

வெள்ள நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.5 ஆயிரமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகளை புதுப்பித்து வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசாக பொங்கல் பொருள்களுடன் ரூ.2,500 மற்றும் வேட்டி, சேலையையும் சோ்த்து வழங்கிட வேண்டும் என்றாா்.

அப்போது, இந்து மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் உடையாா், நிா்வாகிகள் முருகானந்தம், சீனிவாசன், சசிக்குமாா், கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.