திருநெல்வேலி

தோ்தல் விதிமீறல்களை தடுக்கக்கோரி நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் விதிமீறல்களை தடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. ராதாபுரம், வள்ளியூா் பகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக இம் மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு நடைபெறும் தோ்தல் விதிமீறல்கள் குறித்து ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த நிலையில், சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம்.

ராதாபுரம் பகுதியில் தோ்தல் விதிமீறல்கள் அதிகரித்துள்ளன. வழிபாட்டுத்தலங்களில் வாக்குசேகரிப்பது, சட்டப் பேரவைத் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை நிகழ்கின்றன. இதுபோன்ற தோ்தல் விதிமீறல்களை மாவட்ட தோ்தல் அதிகாரியான ஆட்சியா் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுதொடா்பாக மனுவும் அளிக்க உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT