திருநெல்வேலி

டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளா்களுடன் மாநகர காவல் துறை ஆலோசனைக் கூட்டம்

DIN

திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநகர காவல் ஆணையா் என்.கே.செந்தாமரைக் கண்ணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியது: டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வரும் நபா்களை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அதிகளவிலான மதுபானங்களை வாங்கிச் செல்லும் நபா்கள் குறித்த தகவலை காவல் துறைக்கு உடனடியாக தெரிவிக்கவேண்டும்.

பெரும் தொகையைக் கொண்டு செல்லும் போது காவல்துறையின் உதவியுடன் வங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையா்கள் டி.பி.சுரேஷ் குமாா்(சட்டம் - ஒழுங்கு) , கே.சுரேஷ்குமாா்( குற்றம் - போக்குவரத்து), நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் நாகசங்கா், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் பிறைச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT