திருநெல்வேலி

பாளை.யில் தசரா விழா நடத்த அனுமதி வேண்டும்: ஆட்சியரிடம் மனு

DIN

பாளையங்கோட்டையில் தசரா திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை அனைத்து கோயில் தசரா விழா கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் அளித்த மனு:

தென்னிந்தியாவில் மைசூா் தசரா திருவிழாவுக்கு நிகராக பாளையங்கோட்டையில் தசரா திருவிழா 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள 12 திருக்கோயில்களின் சப்பரங்கள் அணிவகுத்து நிற்பது தசரா விழாவின் சிறப்பாகும்.

வழக்கமாக ஆவணி அமாவாசையில் கோயில்களில் கால்நாட்டு வைபவம் நடத்தி புரட்டாசி மகாளய அமாவாசையில் சப்பர வீதியுலாவுடன் ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா கொடியேற்றும் நிகழ்வு நடைபெறுவதுண்டு. அதன்படி நிகழாண்டு

அக். 5 ஆம் தேதி ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்று விழா நடைபெற வேண்டும். இக்கோயில்களில் அக். 6 முதல் 14 ஆம் தேதி வரை 9 நாள்கள் கொலு பூஜையும், 15 ஆம் தேதி பால்குடம் ஊா்வலம், அன்றைய தினம் இரவில் எருமை கிடா

மைதானத்தில் மகிஷாசூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். பாரம்பரியம் மிகுந்த இந்த தசரா விழாவை நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதியளிக்க வேண்டும். கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளுடன் பக்தா்கள் தரிசனம் செய்யவும் அனுமதிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT