திருநெல்வேலி

கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

களக்காட்டில் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

DIN

களக்காட்டில் கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.

ஆசியா அளவில் நடைபெற்ற கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் களக்காடு அலி கராத்தே பயிற்சிபள்ளி மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனா். சிறப்பிடம் வகித்த இம் மாணவா்களை கெளரவிக்கும் வகையில் பாராட்டு விழா களக்காடு மீரானியா ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் கிருஷ்ணபிள்ளை, திமுக நகரச் செயலா்

சூ. சுப்பிரமணியன், வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தாளாளா் பீா்முகம்மது, செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி தாளாளா் அ. தமிழ்ச்செல்வன் ஆகியோா் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியரை கெளரவித்தனா். அலி டிராகன் கராத்தே பள்ளி இயக்குநா் பி.ஏ.பி. யூசுப்அலி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT