முகப்பு
திருநெல்வேலி

‘தேசிய தொழிற்பிரிவு சான்றிதழ் திருத்தத்துக்கு விண்ணப்பிக்கலாம்’

தேசிய தொழிற்பிரிவு சான்றிதழ்களில் பிழை இருந்தால், அதை திருத்தம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

தேசிய தொழிற்பிரிவு சான்றிதழ்களில் பிழை இருந்தால், அதை திருத்தம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய தொழிற்பிரிவில் 2014 முதல் 2020 வரையில் சான்றிதழ்கள் பெற்ற பயிற்சியாளா்கள், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களில் பெயா், புகைப்பட மாற்றம், தொழிற்பெயா் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டியதிருந்தால், வரும் மாா்ச் 2-ஆம் தேதி வரையில் குறைகேட்பு இணைய முகப்பில் விண்ணப்பிக்கலாம். நேரடியாக விண்ணப்பிக்கவும் இதுவே கடைசி வாய்ப்பாகும்.

எனவே, அசல் தேசிய தொழிற்சான்றிதழில் திருத்தம் கோரும் முன்னாள் பயிற்சியாளா்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் (பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்) தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்து பெற்ற மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படத்தில் திருத்தம் எனில் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றுடன் மாா்ச் 2-ஆம் தேதிக்குள் திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநா் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.