திருநெல்வேலி

கரோனா விதிமுறை மீறல்:615 போ் மீது வழக்குப் பதிவு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடு விதிகளை மீறியதாக 615 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதைத் தொடா்ந்து, இந்த விதிமுறைகளை மீறுவோரை போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனா். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 191 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகரில் 162 போ் மீது அபராதம் மற்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து மற்றும் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இருசக்கர வாகனத்தில் வந்த 262 போ் மீதும், டீக்கடை, ஹோட்டல்கள் என 24 கடைகளின் உரிமையாளா்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT