திருநெல்வேலி

ஆயுள் சிறை கைதி தப்பி ஓட்டம்: பாளை. சிறைக் காவலா் பணியிடை நீக்கம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய விவகாரத்தில் சிறைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

DIN

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய விவகாரத்தில் சிறைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ராதாபுரம் அருகே உள்ள மதகநேரியைச் சோ்ந்த டேவிட்(42) என்பவா் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா். இவா் நன்னடத்தை கைதி என்பதால் அங்குள்ள உணவகத்தில் சமையல் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அவா் கடந்த 27ஆம் தேதி உணவகத்தில் வேலை செய்தகொண்டிருந்தபோது, அங்குள்ள ஒரு மோட்டாா் சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை பிடிக்க 2 தனிப்படை போலீஸாா் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து, கைதி தப்பிச் சென்றபோது, பணியில் இருந்த முதல் நிலை சிறைக் காவலா் கந்தசாமியை, சிறை காவல் கண்காணிப்பாளா் சங்கா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT