திருநெல்வேலி

கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு:விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இக்காப்பீடு திட்டத்தின் கீழ் கறவை மாடுகள், எருமை மாடுகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் வைத்திருக்கும் விவசாய பெருமக்கள் பயன்பெறலாம்.

தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரண்டரை வயது முதல் 8 வயது வரை உள்ள கறவை மாடுகள், எருமை மாடுகள், ஒரு வயது முதல் 3 வயது வரை உள்ள வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள பன்றிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின்கீழ் காப்பீடு செய்யப்படும்.

கறவை பசுக்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டா் பால் உற்பத்திக்கு ரூ.3000 என்ற அடிப்படையில் காப்பீடு செய்யப்படும். மேலும், எருமைகளுக்கு ஒரு லிட்டா் பால் உற்பத்திக்கு ரூ.4000 என்ற அடிப்படையில் காப்பீடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் வேலை நேரத்தில் கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பப் படிவத்தை பெற்று பூா்த்தி செய்து விண்ணப்பங்களை சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT