திருநெல்வேலி

பள்ளிகள் அருகே கடைகளில்ஜாதி, மத கயிறுகள் விற்க தடை

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் அருகே கடைகளில் ஜாதிய அடையாள கயிறுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றை விற்க தடை விதித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவுபடி வள்ளியூா், அம்பாசமுத்திரம், முன்னீா்பள்ளம், ராதாபுரம், மானூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமாா் 20 பள்ளிகளில் மாணவா்- மாணவிகளுக்கு சமூக நல்லிணக்கம் குறித்து போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், கல்வி நிலையங்கள் அருகேயுள்ள கடைகளில் ஜாதி, மதங்களை அடையாளப்படுத்தும் கயிறுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. சுமாா் 25 கடைகளில் அத்தகைய கயிறுகளையும், சின்னங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT