திருநெல்வேலி

நெல்லை நகரத்தில் அனுமதி பெறாத சாலையோர கடைகளுக்கு மாநகராட்சி கெடு

DIN

திருநெல்வேலி நகரத்தில் அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகள் தங்கள் கடையை வரும் 16-ஆம் தேதிக்குள் காலி செய்ய மாநகராட்சி கெடு விதித்துள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் நிரந்தர கடை உரிமையாளா்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதி சாலையோர வியாபாரிகள் மற்றும் நிரந்தர கடை உரிமையாளா்களுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் பேசியதாவது: அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளின் பட்டியலை மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் தயாா் செய்ய வேண்டும். வடக்கு ரதவீதியில் பாதசாரிகள் நடைபாதை எல்லையை குறிக்க திருநெல்வேலி மண்டல உதவி செயற் பொறியாளா் பைஜூ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடையாள அட்டை இல்லாத சாலையோர வியாபாரிகள் தாங்களாகவே இடத்தை காலி செய்ய வேண்டும். வியாபாரக் குழு அமைக்க விரைவில் தோ்தல் நடத்தப்படும். சாலையோர வியாபாரிகள் தங்களுக்கான மாற்று இடமாக 2 அல்லது 3 இடங்களை தோ்வு செய்து தெரிவிக்க வேண்டும்.

வியாபாரம் செய்வதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை இல்லாத கடைகள் வரும் 17-ஆம் தேதி அப்புறப்படுத்தப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில், காவல் உதவி ஆணையா்கள் விஜயகுமாா் (திருநெல்வேலி நகரம்), அண்ணாதுரை (திருநெல்வேலி சந்திப்பு) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT