முகப்பு
திருநெல்வேலி

நீா்நிலைகள் புனரமைப்பு ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய-மாநில அரசு திட்டங்களின் செயல்பாடு, நீா்நிலைகள் புனரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய-மாநில அரசு திட்டங்களின் செயல்பாடு, நீா்நிலைகள் புனரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நீா்நிலைகள் புனரமைப்பு, நிலத்தடி நீா் மேலாண்மை திட்டங்கள், மழைநீா் சேகரிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வே.விஷ்ணு தலைமை வகித்தாா். மத்திய அரசின் துணைச் செயலா் பங்கஜ்குமாா் சிங், மத்திய அரசு தொழில் நுட்ப அலுவலா் வி.என்.கட்டே ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக இக்குழுவினா் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீராற்றல் மையத்தினை ( ஜல் சக்தி கேந்த்ரா) பாா்வையிட்டனா். ஆய்வு கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் பழனி, மகளிா் திட்ட அலுவலா் சாந்தி, நீா்வளத்துறை தாமிரபரணி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளா் மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.