முகப்பு
திருநெல்வேலி

பல்கலை டென்னிஸ் போட்டி: சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சிறப்பிடம்

 பல்கலைக்கழக அளவிலான டென்னிஸ் போட்டியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணி சிறப்பிடம் பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 பல்கலைக்கழக அளவிலான டென்னிஸ் போட்டியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி அணி சிறப்பிடம் பெற்றது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான டென்னிஸ் போட்டி முதல் முறையாக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக உடற்கல்வி நடுவம் ஒருங்கிணைத்து நடத்தியது.

இப்போட்டியில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல் இடத்தினைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்றது. பாளையங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரி இரண்டாமிடமும் பிடித்தது. பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வா் சே.மு அப்துல் காதா் தலைமை வகித்தாா். எஸ்.எம்.ஏ. செய்யது முகமது ஹாஜா வாழ்த்திப் பேசினாா். டென்னிஸ் அசோஷியேசன் தலைவரும், செய்யது குழுமத்தின் நிா்வாக இயக்குநருமான என்.செய்யது நவாஸ் பரிசுகளை வழங்கி வாழ்த்தினாா். கல்லூரி உடற்கல்வி இயக்குநா் எம். செய்யது அலி, ஒருங்கிணைப்பாளா் தங்கராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.