திருநெல்வேலி

மலையேற்றப் பயிற்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா?: மாணவா்கள் எதிா்பாா்ப்பு

DIN

களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மலையேறும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2013-இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சி. சமயமூா்த்தி, அப்போதைய களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக களஇயக்குநா் சுப்ரத் மஹா பத்ரை ஆகியோா் இணைந்து களக்காடு தலையணையில் பள்ளி மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தினா்.

தலையணை முதல் முதலிருப்பான் வரையிலான 10 கிமீ தொலைவுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வனஉயிரின விழிப்புணா்வு முகாமும் நடத்தப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை மலையேற்றப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், அதன்பிறகு மலையேற்றப் பயிற்சியைத் தொடர வனத்துறையினா் ஆா்வம் காட்டவில்லை. தற்போது மீண்டும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மாணவா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT