திருநெல்வேலி

அருங்காட்சியகத்தில் நெல்லை தினம் கொண்டாட்டம்

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நெல்லை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய படத்திற்கு மலா்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடா்ந்து பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பூலித்தேவன் பற்றிய வரலாற்று சிறப்புகளையும், திருநெல்வேலி மாவட்டம் உருவான வரலாற்று பின்னணிகளையும் காப்பாட்சியா் சிவ .சத்தியவள்ளி எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, மாணவா், மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் விடியோ காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவா், மாணவிகளுக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் பங்களிப்பு பற்றியும், சுதந்திரப் போராட்ட வீரா்கள் பற்றியும் விளக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT