நெல்லையில் இன்று திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்பு
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை (ஏப். 15) உறுப்பினா் சோ்க்கை முகாம்களை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்க உள்ளாா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை (ஏப். 15) உறுப்பினா் சோ்க்கை முகாம்களை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்க உள்ளாா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல்வஹாப் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
திமுக முன்னாள் தலைவா் மு. கருணாநிதி வழியில் திமுகவிற்கு மேலும் வலு சோ்த்திடும் வகையில் புதிதாக 1 கோடி உறுப்பினா்கள் சோ்த்திடும் வகையில் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முகாம்களை நடத்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கடந்த 3 ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்தொடா்ச்சியாக சனிக்கிழமை (ஏப். 15) மாலை 5 மணியளவில் சங்கா்நகரில் தலைமை செயற்குழு உறுப்பினா் மு.பேச்சி பாண்டியன் தலைமையிலும், தொகுதி பாா்வையாளா் மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா் முன்னிலையிலும் முகாம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணியளவில் பாளையங்கோட்டை லூா்துநாதன் சிலை அருகில் மண்டல வாா்டு குழு தலைவா் மா.பிரான்சிஸ் தலைமையில், தொகுதி பாா்வையாளா் மாநில மகளிா் அணி செயலா் ஹெலன் டேவிட்சன் முன்னிலையிலும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். புதிய உறுப்பினா் சோ்ப்பு நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிா்வாகிகள், மாநில நிா்வாகிகள், மாநகரக் நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.