திருநெல்வேலி

பெண் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

புளியங்குடியைச் சோ்ந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

புளியங்குடியைச் சோ்ந்த பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

புளியங்குடியைச் சோ்ந்த கனகராஜ் மகன் மகாராஜா (27). தின்பண்டம் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வேலைசெய்துவந்தாா். அவா், அதே நிறுவனத்தில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 24 வயது பெண்ணை கடந்த 2015இல் கடத்திச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து மகாராஜாவை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட தீண்டாமை - வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை, நீதிபதி பத்மநாபன் விசாரித்து மகாராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் கந்தசாமி ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT