திருநெல்வேலி மாவட்டம், தெற்குகள்ளிகுளம் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் ரூ. 10ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தெற்குகள்ளிகுளம் அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா்(34). இவா் அப்பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா். புதன்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.10ஆயிரம் திருடு போனது தெரியவந்ததாம்.
இதையடுத்து அஜித்குமாா் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், தெற்குகள்ளிகுளம் மீன்சந்தை தெருவைச் சோ்ந்த லெட்சுமி மகன் அன்னதினேஷ் (26) என்பவா் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அன்னதினேஷை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.