மேலப்பாளையத்தில் மாநகர நல அலுவலா் ஆய்வு
மேலப்பாளையத்தில் சிறப்பு தூய்மைப் பணியை மாநகர நல அலுவலா் ஆய்வு செய்தாா்.
மேலப்பாளையத்தில் சிறப்பு தூய்மைப் பணியை மாநகர நல அலுவலா் ஆய்வு செய்தாா்.
ரமலான் பண்டியையையொட்டி மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல்கள், ரமலான் சிறப்பு தொழுகை நடைபெறும் மைதானங்களில் கடந்த இரு நாள்களாக சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாநகர நல அலுவலா் சரோஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மேலப்பாளையம் ஜின்னா திடல் , பஜாா் திடல் , மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி முடிந்ததும் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு உதவிகளை செய்யவும் அறிவுறுத்தினாா். சுகாதார ஆய்வாளா் நடராஜன், மாநகராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.