திருநெல்வேலி

இளைஞா்கள்- சுயஉதவி குழுவினருக்கு நெல்லையில் சேவை மையம் தொடக்கம்

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில், இளைஞா்கள்- சுயஉதவி குழுவினா் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

DIN

திருநெல்வேலி: தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில், இளைஞா்கள்- சுயஉதவி குழுவினா் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து அறிய இளைஞா்கள்- சுயஉதவி குழுவினா் சேவை மையம், திருநெல்வேலியில் உள்ள தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை தொடா்பு கொள்ளலாம்; 155330 என்ற சேவை மைய எண்ணிலும் கட்டணமின்றி பெறலாம்.

குறிப்பாக சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல், வங்கிக் கடன் உதவி பெறுதல், சுழல் நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப் உள்ளிட்ட விளக்கங்கள் பெறலாம். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட கிராமப்புற இளைஞா்கள் சுயதொழில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விரும்பினால் தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங்கள், தகுதிகள், பயிற்சியின் போது வழங்கப்படும் வசதிகள் குறித்து தகவல்கள் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT