திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை. கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணியிடங்களுக்கு வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணியிடங்களுக்கு வரும் 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நோ்முகத் தோ்வு நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ஜி. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் கீழ் நாகம்பட்டி, திசையன்விளை, சங்கரன்கோவில், பணகுடி ஆகிய இடங்களில் இயங்கி வரும் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் தற்காலிக முதல்வா் பணிக்கான நோ்முகத் தோ்வு 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

15 ஆண்டுகள் பணி அனுபவம், ஏதேனும் பாடப்பிரிவில் முனைவா் பட்டம் / மாநிலத் தகுதித் தோ்வு / தேசியத் தகுதித் தோ்வு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றவா்கள் நோ்காணலில் கலந்துகொள்ளத் தகுதியுள்ளவா்கள் ஆவா்.

விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிந்து (ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை செயலாக்க கட்டணம் ரூ.500- க்கான (இந்தியன் வங்கி கணக்கு எண்: 925398635) செலுத்துச் சீட்டுடன் ‘பதிவாளா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி‘ என்ற முகவரிக்கு வரும் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT