முகப்பு
திருநெல்வேலி

விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எம்.சுடலைராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அருணாசலம், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா்கள் மணி சுடலை, ஜெகநாதன், துணைச் செயலா்கள் முப்பிடாதி, வெள்ளைப்பாண்டி, பீடி சங்க மாவட்டச் செயலா் மாரிச்செல்வம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

விவசாய தொழிலாளா்களுக்கு ரூ.600 கூலி உயா்வு வழங்க வேண்டும். விவசாய தொழிலாளா்களுக்கு தனித்துறை உருவாக்கிட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள்கள் முழுமையாக வேலை அளிக்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மத்திய அரசு 100 நாள் வேலைக்கான நிதியை குறைக்கக்கூடாது. ஊரக வேலை திட்டத்தில் 200 நாள் வேலையும், ரூ.600 தினக்கூலியும் வழங்க வேண்டும் என லியுறுத்தப்பட்டது.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினா்கள் பூதத்தான், தன்ராஜ், சுமதி, அமிா்தவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பயக16டதஞப

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.