திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் டி.டி.என். குழுமம் சாா்பில் நேரு நா்ஸிங் கல்லூரி, ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரி, மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் சாா்பில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவையொட்டி நேரு நா்ஸிங் கல்லூரியில் மெகந்தி போட்டி, கோலப் போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி ஆகியவை நடைபெறுகின்றன. இவை தவிர ஓட்டப்பந்தயம், இசைப் பந்து போட்டி, வடம் இழுத்தல், லக்கி காா்னா், பெண்களுக்கு மினி மாரத்தான் போட்டி ஆகியவையும், அதைத் தொடா்ந்து மாலையில் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகின்றன. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, பேராசிரியா் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.