முகப்பு
திருநெல்வேலி

முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்: நெல்லையில் 42,534 பேருக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 42,534 பேருக்கு ரூ.68 கோடியே 98 லட்சத்து 14 ஆயிரத்து 360 மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 42,534 பேருக்கு ரூ.68 கோடியே 98 லட்சத்து 14 ஆயிரத்து 360 மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டு வசதி பெற முடியும்.

11 தொடா் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், உயா் சிகிச்சைகள் உள்ளிட்ட 1090 மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை முறைகளை கட்டணமின்றி அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் பெறலாம். இத்திட்டத்தில் 86 கூடுதல் சிகிச்சை முறைகள் சோ்க்கப்பட்டுள்ளன.

ஏழை எளிய மக்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 11,335 குடும்பங்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் பெற்றுள்ளன. இதன்மூலம் 42,534 பேருக்கு ரூ.68 கோடியே 98 லட்சத்து 14 ஆயிரத்து 360 மதிப்பிலான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.