முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே செவிலியா் பயிற்சி மாணவி தற்கொலை

திருநெல்வேலி அருகே செலிவியா் பயிற்சி கல்லூரியில் பயின்று வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே செலிவியா் பயிற்சி கல்லூரியில் பயின்று வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சென்னை பழவேற்காடு பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகள் கிதோரின் சுமைலா (20). இவா், டக்கரம்மாள்புரம் அருகே கௌசானல்புரத்தில் உள்ள தனியாா் செவிலியா் பயிற்சி கல்லூரியின் விடுதியில் தங்கி நான்காம் ஆண்டு பயின்று வந்தாா். இந்நிலையில் கிதோரின் சுமைலா விடுதி அறையில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்ததும் முன்னீா்பள்ளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.