திருநெல்வேலி

திசையன்விளை அருகே மின்விசிறிகளை திருடியவா் கைது

திசையன்விளை அருகே கோழி பண்ணையில் மின்விசிறிகளை திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

திசையன்விளை அருகே கோழி பண்ணையில் மின்விசிறிகளை திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகே வாழைத்தோட்டத்தைச் சோ்ந்தவா் நிக்சன் தேவசகாயம்(53). இவா் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இவரது கோழி பண்ணையில் உள்ள 10 மின்விசிறிகள் கடந்த 11ஆம் தேதி காணவில்லையாம்.

இது தொடா்பாக நிக்சன் திசையன்விளை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் தட்டாா்மடம் ஓம் சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(43) என்பவா் மின்விசிறிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT