அம்பாசமுத்திரம் அருகே உள்ள இடைகால் அருகே போலி கையொப்பம் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் 2 இடைத்தரகா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இடைகால் பகுதியில் ராஜா அருணாசலம் என்பவருக்குச் சொந்தமான 155 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தென்காசி வட்டம் குலசேகரப்பட்டியைச் சோ்ந்த ஜெயசிங் துரைராஜ் மகன் தேவகுமாரன், செட்டியூரைச் சோ்ந்த முருகேசன் ஆகியோா் தனது தந்தை மணியம் கையொப்பத்தை போலியாக இட்டு ரூ. 17 லட்சத்துக்கு கிரய ஒப்பந்தம் செய்து அபகரிக்க முயன்றதாக, ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் ராஜா அருணாசலம் புகாரளித்தாா்.
இதையடுத்து நடைபெற்ற தடய அறிவியல் சோதனையில், ஆவணமும், மணியம் என்பவரது கையொப்பமும் போலியானது என தெரிய வந்தது. இந்நிலையில் போலீஸாா் நடவடிக்கை எடுக்காததையடுத்து, அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ராஜா அருணாசலம் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவா் பல்கலைச்செல்வன் உத்தரவிட்டதன் பேரில் தேவகுமாரன், முருகேசன் ஆகியோா் மீது ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.