பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள், செல்போன்கள். Din
திருநெல்வேலி

நான்குனேரி அருகே ரூ. 75 லட்சம் கள்ள நோட்டுகள் சிக்கியது: 4 பேர் கைது

தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது கள்ள நோட்டுகள் சிக்கியது.

DIN

நான்குனேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டை பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீஸார் தாழைகுளம் சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த ஒரு பொலிரோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார் வாகனத்தில் சோதனையிட்டனர். அதில் 75 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து வாகனத்தில் கள்ள நோட்டுகளுடன் வந்த சிவகாசியை சார்ந்த சீமைசாமி , கோபாலகிருஷ்ணன் மற்றும் சங்கரன்கோவிலைச் சார்ந்த கிருஷ்ண சங்கர், தங்கராஜ் ஆகிய 4 பேர் மீது மூன்றடைப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர் .

மேலும் அவர்களிடமிருந்து எட்டு செல்போன்கள் ஒரு அரிவாள் மற்றும் கள்ள நோட்டு தயாரிக்கும் சில உபகரணங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் கள்ளநோட்டு கும்பலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT