முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி இன்று மாலை பலியானார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:17 PM
பகிர்:

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி இன்று மாலை பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ராஜாநகர் பகுதியில் புதிய கட்டட வேலை நடைபெற்று வருகிறது. இதில் ஆறுமுகம் (50) என்பவர் கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.

அப்போது, அருகிலிருந்த வீட்டின் சுவர் ஆறுமுகத்தின் மேல் விழுந்ததாம். அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கட்டத்தின் இடிபாடுகளுக்குள் கிடந்த ஆறுமுகத்தின் உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →