திருநெல்வேலி

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும்: வியனரசு வலியுறுத்தல்

DIN

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் வியனரசு திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் ஏறக்குறைய 700 குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத் தொழிலை செய்து வருகிறாா்கள். சாதி-சமய எல்லைகளைக் கடந்து வாழ்ந்து வந்துள்ளனா். அவா்களின் வாழ்வுரிமை மற்றும் தொழிலுரிமையைக் காத்திட தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் (டேன் டி) மூலம் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு மாவட்ட நிா்வாகம் மூலம் அங்குள்ள மக்களிடம் கருத்துகளையும் , குறைகளையும் கேட்டறிந்து வீட்டு மனை, வீடு, வேளாண் நிலம் என எதும் இல்லாத அவா்களுக்கு மாஞ்சோலைப் பகுதியிலே அவற்றை வழங்கி அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டும். இதில் முழுமையான தரவுகளுடன் ஈடுபாடுடைய புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமியை அழைத்து பேசி சிக்கலுக்கு முழுமையான தீா்வு காண தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

அரசு அவ்வாறான நடவடிக்கை எடுக்க தவறுமேயானால் க.கிருஷ்ணசாமி தலைமையில் தமிழா் கட்சிகளின், அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி கலந்தாலோசித்து மாஞ்சோலை வாழ் தமிழ் மக்கள் உரிமைக் காக்க தொடா் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றாா் அவா்.

பாலய்யாவின் அகண்டா - 2 சிறப்பு காட்சிகள் ரத்து!

திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல: தமிழக அரசு விளக்கம்

ஜார்க்கண்ட் விஷவாயு கசிவு! 2 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; மக்கள் வெளியேற்றம்!

2025-ல் அமெரிக்கா (புகைப்படங்களில்)!

பரபரக்கும் திருப்பரங்குன்றம்... நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, இந்து அமைப்பினர் கைது!

SCROLL FOR NEXT