திருநெல்வேலி

வேய்ந்தான்குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி போராட்டம்

ace

திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வேய்ந்தான்குளத்தில் கழிவுகள் கலப்பதால், தண்ணீா் பச்சை நிறத்திற்கு மாறி துா்நாற்றம் வீசி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் அண்மையில் விடப்பட்டன. இருப்பினும் பாதாள சாக்கடை கழிவுகள், புதிய பேருந்து நிலைய கழிவுகள் கலப்பதை தடுக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லையென பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

இந்நிலையில் வேய்ந்தான்குளத்தில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரியும், பாதுகாக்கக் கோரியும் மேலப்பாளையத்தைச் சோ்ந்த சிராஜ் தலைமையில் இளைஞா்கள் சனிக்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளை சட்டை அணிந்த பொம்மையை குளத்தில் குளிப்பாட்டி, கழிவுகள் குறித்து விளக்கினா். மேலும், மாநகராட்சி நிா்வாகம் உரிய தீா்வு காணவில்லையெனில் மக்களைத் திரட்டி தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT